விஜயின் இறுதி படம் - புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப் போவதில்லை – புதிய அறிவிப்பு
விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் குறித்து உறுதி – புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
கரூர் நெரிசல் சர்ச்சையால் நடிகர் விஜய் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது அடுத்த படமான ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.
ஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜனநாயகன் படக்குழு இன்று புதிய போஸ்டரை வெளியிட்டு, படம் திட்டமிட்டபடி ஜனவரி 9, 2026 அன்று வெளியாகும் என உறுதியாக அறிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் கடைசி படமாக உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தை எச். வினோத் இயக்குகிறார். படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் இந்த அரசியல் திரில்லர் திரைப்படத்தை கே.வி.என். நிறுவனம் மிகப்பெரிய அளவில் தயாரித்து வருகிறது.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, விஜய் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். இதையடுத்து படம் ரிலீஸ் தள்ளிப்போகும் என செய்திகள் வந்தன.
ஆனால் தற்போது தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பின்படி, ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் திகதி உலகம் முழுவதும் திட்டமிட்டபடி வெளியாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|