ஆங்கிலேயருக்கும் கடன் வழங்கிய இந்திய வணிகர் -யார் இவர்?
முகலாயருக்கும் கிழக்கிந்திய கம்பனிக்கும் நிதி உதவி செய்தவர்
விர்ஜி வோராவின் செல்வமும் வியாபாரப் பொலிவும்!
உலக வரலாற்றிலேயே இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார வணிகராக விளங்கியவர் விர்ஜி வோரா. தற்போதைய காலத்தில் பில்லியன் டாலர்களைப் பற்றிப் பேசப்படும் நிலையில், 1600-ஆம் ஆண்டுகளிலேயே கோடிக்கணக்கான செல்வங்களை குவித்து உலக வியாபார வரலாற்றில் மறக்க முடியாத சின்னமாக திகழ்ந்தவர்.
ஆங்கிலேயருக்கே கடன் வழங்கிய இந்தியர்
பெரும்பாலான பழங்கால செல்வங்கள் அரசர்களிடமே இருந்த காலத்தில், ஒரு சாதாரண வணிகர் என்பதையும் மீறி, ஆங்கிலேயர் மற்றும் டச் கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு நிதி உதவி செய்த பெரும் பொருளாதார சக்தியாக வோரா விளங்கினார்.
1590இல் குஜராத்தின் சூரத்தில் பிறந்த விர்ஜி வோரா, முகலாய மன்னர்களின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவிலும், அப்போது வந்துகொண்டிருந்த ஐரோப்பியக் கம்பெனிகளின் வருகையிலும் தனது வணிகத் திறமையை சாதனைக்கேற்ற விதத்தில் பரப்பினார்.
மசாலா பொருட்கள், தங்கம், வெள்ளி, பவளம், தந்தம் போன்ற விலையுயர்ந்த வாணிபப் பொருட்கள் அனைத்தையும் மொத்த விலைக்கு வாங்கி, உலக சந்தைகளில் விற்றார்.
வட்டிக்கு கடன் வழங்கல், முதலீடுகள் செய்வது என நிதி தொழிலில் பயிற்சி பெற்றவராகவும், தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டவராகவும் வோரா காணப்பட்டார்.
அந்தக் காலத்தில் அவரிடம் இருந்த சொத்துகளின் மதிப்பு 8 மில்லியன் ரூபாயாக இருந்ததாக வரலாற்று பதிவுகள் கூறுகின்றன. இதை இன்றைய மதிப்பில் மாற்ற முயன்றால், பில்லியன் கணக்கான ரூபாயாக இருக்கும்.
அவரது செல்வம், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியையே பிரமிக்க வைத்ததுடன், முந்தைய முகலாய மன்னர்கள் வரை அவரிடம் நிதி ஆலோசனை கேட்கும் நிலைக்கு வந்தனர். ஔரங்கசீப் டெக்கான் போரில் நிதி உதவி கோரி வோராவிடம் தூதரை அனுப்பியதாகக் கூட பதிவு உண்டு.
ஆனால் அவரது செல்வத்திற்கும் செல்வாக்கிற்கும் எதிர்வினை வரும் நேரமும் வந்தது. மராத்திய மன்னர் சிவாஜி சூரத்தில் படையெடுத்தபோது வோராவின் வீடு மற்றும் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
பின்னர் அவர் மீண்டும் ஒரு வரம்பு வரை செல்வத்தை திரட்டினாலும், இழந்தவைகளை முழுமையாக மீட்டுக்கொள்ள முடியவில்லை.
இருப்பினும், தனது செல்வங்களை பொதுமக்கள் நலனுக்காகக் கொடையாக வழங்கியதற்கும், சமூக நிதி உதவிகள் பலவற்றை செய்ததற்கும் விர்ஜி வோரா வரலாற்றில் வித்தியாசமான இடத்தைப் பெற்றார்.
இந்திய வரலாற்றில் வணிகம் மற்றும் நிதி சார்ந்த சக்தியாக இருந்த அவரது பயணம், இன்று கூட தொழில்முனைவோர்களுக்கான ஒரு பிரேரணையாகவே உள்ளது.