VJ சித்துவின் ‘டயங்கரம்’ பட பூஜை வீடியோ வெளியீடு
VJ சித்து இயக்கும் ‘டயங்கரம்’ படத்தின் பூஜை நிகழ்ச்சி கவனம் ஈர்த்தது
VJ சித்து இயக்கி நடிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் பூஜை வீடியோ வைரலாகிறது!
தமிழ் யூடியூப் உலகில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் Vj சித்து. அவரின் Sidhu Vlogs என்ற சேனல் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெறும் வகையில் பிரபலமானது.
வாழ்க்கையின் உண்மைகளை நகைச்சுவையுடன் கலந்து வெளிப்படுத்தும் அவரது வீடியோக்கள், குறிப்பாக இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
சமீபத்தில் சித்து, ஹர்ஷத் கான் இணைந்து அஷ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அந்த படத்தில் இவர்களின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
இப்போது VJ சித்து புதிய அவதாரம் எடுத்து, இயக்குநராக களமிறங்கியுள்ளார். அவரே இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கும் தனது புதிய திரைப்படத்திற்கு டயங்கரம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் பூஜை விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. படக்குழுவினர் பூஜை விழா காட்சிகளை தொகுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
#Dayangaram Pooja, innimey action bayangarama irukum! ❤️🔥🥁
Shoot begins 🤙🏻@IshariKGanesh @VJSiddhuOG@kushmithaganesh @Music_Siddhu @PradeepERagav @dineshkrishnanb@nitinsathyaa @VelsFilmIntl@velsmusicintl @prosathish @Linqmarqet#Vjsiddhu #DayangaramPooja pic.twitter.com/mANAUqiem8— Vels Film International (@VelsFilmIntl) October 29, 2025
விஜே சித்து இயக்கத்தில் உருவாகும் இந்த டயங்கரம் படம் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரும் உற்சாகத்துடன் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர். பலர், “யூடியூப் வெற்றிக்குப் பிறகு சித்துவின் இயக்குனர் பயணம் எப்படி இருக்கும்” என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.