வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு
இரு முகமூடி துப்பாக்கிதாரிகள் திடீர் தாக்குதல் – தலைவருக்கு காயம்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் காயம் – மருத்துவமனையில் அனுமதி
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூடு சில நேரங்களுக்கு முன் பிரதேச சபை மண்டபத்துக்குள் நடந்துள்ளது. அப்போது லசந்த விக்ரமசேகர தனது இருக்கையில் அமர்ந்திருந்தபோது, இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் அவர் கடுமையாக காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துக்கு பிந்தைய நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் வெலிகம பிரதேச சபை வளாகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய காவல்துறை விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவத்தால் வெலிகமப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|