கால் மேல் கால் போட்டு இருப்பவர்களுடைய ஆளுமையை ரகசியம்
கால் மேல் கால் போட்டு அமர்வது உங்கள் குணநலனையும் மனநிலையையும் காட்டும்
கால் மேல் கால் போட்டு அமர்வது - உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும் ரகசியம்!
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, மனிதர்களின் உடல் இயக்கங்களும், பழக்கங்களும் அவர்களின் குணநலன்களை வெளிப்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
அதில், “கால் மேல் கால் போட்டு அமர்வது” என்பது ஒரு சாதாரண உட்காரும் முறையாகத் தோன்றினாலும், அதற்குள் பல உளவியல் மற்றும் ஆளுமை ரகசியங்கள் மறைந்துள்ளன.
அலுவலகத்தில், வீட்டில் அல்லது நண்பர்களுடன் பேசும்போதோ கூட, பலர் அறியாமலேயே இந்த அமர்வைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
தன்னம்பிக்கை மற்றும் அதிகார உணர்வு
கால் மேல் கால் போட்டு அமர்வது பல நேரங்களில் தன்னம்பிக்கையின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த உட்காரும் நிலை, ஒருவர் தன்னுடைய சிந்தனைகளில் நம்பிக்கை வைத்திருப்பதை, மற்றவர்களின் முன் உறுதியான தோற்றத்தை காட்ட விரும்புவதை குறிக்கிறது.
உளவியல் நிபுணர்களின் கருத்துப்படி, இது ஒரு “அதிகார நிலை” (power pose) போல் செயல்பட்டு, வெளிப்படையாக குளிர்ச்சியான மனப்பான்மையையும் கட்டுப்பாட்டையும் காட்டும்.
ஆறுதல் மற்றும் உடல் சமநிலை
சிலர் கால் மேல் கால் போட்டு அமர்வது மூலம் அதிக ஆறுதலை உணர்கிறார்கள். குறிப்பாக நீண்ட நேரம் உட்கார வேண்டியவர்கள், இந்த நிலையில் இடுப்பு மற்றும் முதுகின் அழுத்தத்தை குறைத்து உடலுக்கு நல்ல ஆதரவு கிடைக்கச் செய்கிறது. இது உடல் தோரணையை (posture) சரிசெய்யவும் உதவும்.
ராயல் மற்றும் ஸ்டைலான தோற்றம்
இந்த உட்காரும் பழக்கம், வெளிப்படையாக ஒரு “ராயல் லுக்” தரக்கூடியது. கால் மேல் கால் போட்டு அமரும் ஒருவர், பிறரின் கண்களில் ஸ்டைலான, கம்பீரமான, நம்பிக்கையுடன் இருக்கும் ஒருவராகத் தோன்றுவார்.
சமூக சூழலில் இது ஒரு செம்மையான first impression உருவாக்க உதவும்.
நம்பிக்கை மற்றும் உணர்ச்சிகளின் வெளிப்பாடு
ஒருவர் உங்கள் முன் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால், அவர்கள் உங்களை நம்புகிறார்கள் என்ற அர்த்தம் கொள்ளலாம்.
ஆனால் அதே சமயம் அவர்கள் கைகளை இருக்கையில் பிடித்து கொண்டிருந்தால், அது அவர்களின் உள்மன அழுத்தத்தையோ அல்லது பிரச்சனையையோ குறிக்கக்கூடும்.
மேலும், ஒருவர் உங்களிடம் பேசும் போது கால் மேல் கால் போட்டு இருந்தால், அவர்கள் உங்கள் பேச்சில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதற்கும் இது அடையாளம்.
கால் மேல் கால் போட்டு அமர்வது, வெறும் உட்காரும் முறையல்ல. அது ஒருவரின் ஆளுமை, நம்பிக்கை, உணர்ச்சி நிலை மற்றும் சமூகத் தொடர்புகளை வெளிப்படுத்தும் ஒரு மொழி.
அடுத்த முறை யாராவது இப்படிப் பட்ட நிலையில் அமர்ந்தால், அவர்களின் மனநிலையை சாமர்த்தியமாக புரிந்து கொள்ளலாம்.