Home>தொழில்நுட்பம்>Google Cache: ஏன் அழ...
தொழில்நுட்பம்

Google Cache: ஏன் அழிக்க வேண்டும்? நன்மைகள் - காரணங்கள்

bySuper Admin|2 months ago
Google Cache: ஏன் அழிக்க வேண்டும்? நன்மைகள் - காரணங்கள்

கேச்சை அழித்தால் என்ன நடக்கும்? எந்த தகவல்கள் நீங்கும்?

எத்தனை தடவை கேச்சை அழிக்க வேண்டும்? சரியான நேரம்

இணையத்தில் நாம் தினசரி பயன்படுத்தும் உலாவிகளில் (Browser) Google Cache எனப்படும் ஒரு சிறப்பு சேமிப்பு முறை உள்ளது.

இது நம்மால் அடிக்கடி பார்ப்பதற்கான இணையதள பக்கங்களின் நகலை தற்காலிகமாக சேமித்து வைக்கிறது.

இதன் மூலம் அந்தப் பக்கங்களை மீண்டும் திறக்கும் போது வேகமாக திறக்க உதவுகிறது. அதாவது கேச் என்பது உலாவி வேகத்தை அதிகரிக்கவும், பயனாளர்களின் அனுபவத்தை எளிமையாக்கவும் உதவும் ஒரு தற்காலிக நினைவகம்.

காலப்போக்கில் கேச் நினைவகம் அதிகமாக சேர்ந்து, உலாவியின் வேகத்தை குறைக்கக்கூடும்.

சில நேரங்களில் பழைய தரவு சேமிக்கப்பட்டிருப்பதால் இணையதளத்தின் புதிய அப்டேட்கள் சரியாக தெரியாமல் போகலாம். மேலும், தனியுரிமை காரணங்களுக்காகவும் கேச் அழிப்பது அவசியம்.

பொதுவாக shared computer பயன்படுத்தும் போது அல்லது பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்பட்டால் கேச் நீக்குவது பாதுகாப்பான நடைமுறையாகும்.

TamilMedia INLINE (43)


கேச் நீக்கப்படும் போது உங்களுடைய உலாவி சேமித்து வைத்திருந்த தற்காலிக கோப்புகள் அனைத்தும் அழிக்கப்படும். இதனால் நீங்கள் பயன்படுத்தும் சில இணையதளங்களில் மீண்டும் உள்நுழைவு செய்ய வேண்டி வரும்.

அதே சமயம் உலாவி தளங்களை மீண்டும் முதல் முறையாக ஏற்றிக் கொள்ளும், அதனால் சிறிது நேரம் அதிகமாக எடுக்கக்கூடும். ஆனால் இதனால் உங்கள் முக்கிய கோப்புகள் அல்லது தனிப்பட்ட தகவல்கள் அழியாது.

பொதுவாக இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு ஒருமுறை கேச்சை அழித்தால் உலாவி வேகம் மற்றும் பாதுகாப்பு நிலை மேம்படும்.

அதிகமாக இணையத்தளங்களை பார்ப்பவர்கள், வேலைக்காக ஆன்லைன் தளங்களை தினமும் பயன்படுத்துவோர் வாரத்திற்கு ஒருமுறை கேச்சை கிளியர் செய்தால் சிறந்தது.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

Tamilmedia.lk