Home>கல்வி>உலகின் முதலிடம் வகிக...
கல்வி

உலகின் முதலிடம் வகிக்கும் நாடுகளின் கல்வியறிவு நிலை

byKirthiga|about 2 months ago
உலகின் முதலிடம் வகிக்கும் நாடுகளின் கல்வியறிவு நிலை

100% கல்வியறிவு கொண்ட நாடுகள் பற்றி தெரியுமா?

உலக கல்வி தரவரிசையில் முன்னணி நாடுகள்

உலகின் முன்னேற்றத்தையும், ஒரு நாட்டின் வளர்ச்சி நிலையும் தீர்மானிக்கும் முக்கியக் குறியீடு கல்வியறிவு விகிதம் ஆகும்.

கல்வியறிவு விகிதம் என்பது ஒரு நாட்டில் படிக்கவும் எழுதவும் தெரிந்த மக்களின் சதவீதம் என்பதை குறிக்கிறது.

உலக அளவில் பல நாடுகள் கல்வி துறையில் பெரும் முதலீடுகளை செய்து தங்கள் குடிமக்களின் கல்வியறிவை மேம்படுத்தியுள்ளன.

சமீபத்திய தரவுகளின்படி அன்டோரா (Andorra), பின்லாந்து (Finland), சான் மரினோ (San Marino), வாடிகன் சிட்டி (Vatican City), லிச்செண்ஸ்டெய்ன் (Liechtenstein) போன்ற நாடுகள் 100% கல்வியறிவு விகிதத்தைக் கொண்டதாகக் கருதப்படுகின்றன.

இந்நாடுகளில் கல்வி அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இலவசமாகவும் உயர் தரத்திலும் வழங்கப்படுகிறது.

மேலும் வட கொரியா, ஜார்ஜியா, எஸ்டோனியா, லித்துவேனியா போன்ற நாடுகளும் கல்வியறிவு விகிதத்தில் 99% க்கும் அதிகமாக முன்னிலை வகிக்கின்றன.

அதே சமயம், பின்லாந்து, நார்வே, ஸ்வீடன், டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் உலகின் சிறந்த கல்வி முறை கொண்ட நாடுகளாகப் போற்றப்படுகின்றன.

Selected image


இதனுடன் ஒப்பிடுகையில், சில வளர்ந்து வரும் நாடுகளில் இன்னும் கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ளது.

குறிப்பாக ஆப்பிரிக்காவின் சுடான், நைஜர் போன்ற நாடுகள் மற்றும் ஆசியாவில் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் கல்வியில் பின்தங்கியுள்ளன.

உலகில் அதிக கல்வியறிவு கொண்ட நாடுகள் தங்கள் நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக கல்வியை அடிப்படை உரிமையாகக் கருதி, சிறு வயதிலிருந்தே அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குகின்றன.

இதுவே அவர்களை உலக கல்வி தரவரிசையில் முன்னணியில் நிறுத்துகிறது.