Home>கல்வி>உலகின் உயரமான மக்கள்...
கல்வி

உலகின் உயரமான மக்கள் வாழும் நாடு எது தெரியுமா?

bySuper Admin|3 months ago
உலகின் உயரமான மக்கள் வாழும் நாடு எது தெரியுமா?

நெதர்லாந்து முதல், உக்ரைன் வரை - உயரமான மக்கள் வாழும் நாடு எது?

Which Country Has the Tallest People in the World

உலக நாடுகளின் சராசரி உயரத்தில் சில நாடுகள் முக்கியமான இடத்தை பிடித்துள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இதில் முன்னிலை வகிக்கின்றன.

மரபியல், உணவுமுறை மற்றும் வாழ்க்கைத் தரம் போன்றவை இவர்களின் உயரத்திற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

Uploaded image



அந்தவகையில், உலகில் உயரமான மக்களை அதிகம் கொண்ட முதல் 10 நாடுகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

நெதர்லாந்து

உலகின் உயரமான மக்களை வைத்திருக்கும் நாடாக நெதர்லாந்து நம்பர் 1 இடத்தில் உள்ளது. இங்கு ஆண்கள் சராசரியாக 6 அடி (183 cm) உயரமுடையவர்கள், பெண்கள் 5.7 அடி (170 cm) உயரமுடையவர்கள். மரபியல் மற்றும் பால், புரதம் நிறைந்த உணவுகளால் இது சாத்தியமானதாக கருதப்படுகிறது.

மாண்டினீக்ரோ

இவர்களும் ஆண்கள் 6 அடி, பெண்கள் 5.7 அடி உயரமுடையவர்களாக உள்ளனர். டைனரிக் மலை பகுதியைச் சேர்ந்த இவர்களின் மரபியல் மற்றும் பாரம்பரிய உணவுகள் காரணமாக உயரம் அதிகமாக உள்ளது.

எஸ்டோனியா

ஐரோப்பாவில் உள்ள இந்த நாட்டில் ஆண்கள் 6 அடி, பெண்கள் 5.6 அடி உயரமுடையவர்கள். சமீபத்திய வளர்ச்சிகள், சுகாதாரம் மற்றும் உணவுத் தரம் இவர்களின் உயரத்தை உயர்த்தியுள்ளது.

போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா

இங்கு இருப்பவர்களும் நெதர்லாந்து, மாண்டினீக்ரோ போன்றே, ஆண்கள் 6 அடி, பெண்கள் 5.6 அடி உயரமுடையவர்கள். மரபியல் மற்றும் உள்ளூர் உணவுகளால் இது சாத்தியமாகியுள்ளது.

ஐஸ்லாந்து

கடல் உணவுகளில் வளமான ஐஸ்லாந்தில் ஆண்கள் 6 அடி, பெண்கள் 5.7 அடி உயரத்துடன் இருக்கின்றனர்.

Uploaded image



டென்மார்க்

இந்த நாட்டு மக்களும் 6 அடி ஆண்களாகவும், 5.7 அடி பெண்களாகவும் இருக்கின்றனர். உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

செக் குடியரசு

இங்கு ஆண்கள் சராசரியாக 5 அடி 11 அங்குலம் (180 cm), பெண்கள் 5.6 அடி (168 cm) உயரமுடையவர்கள்.

லாட்வியா

இந்நாட்டிலும் ஆண்கள் 5.11 அடி, பெண்கள் 5.6 அடி உயரமுடையவர்கள்.

ஸ்லோவாக்கியா

இவர்கள் மற்ற நாடுகளுக்கு இணையாகவே 5.11 அடி ஆண்கள், 5.6 அடி பெண்களாக இருக்கின்றனர்.

உக்ரைன்

இங்கேயும் 5.11 அடி ஆண்கள் மற்றும் 5.6 அடி பெண்கள் உள்ளனர். மரபியல் மற்றும் உணவுமுறைகள் இங்கும் காரணமாகக் காணப்படுகின்றன.