ரூ.2.52 கோடி சம்பள வேலையை விட்ட இளைஞர் - காரணம் என்ன?
ரூ.2.52 கோடி சம்பள வேலையை விட்டுவிட்ட கூகிள் எம்ப்ளாயி – காரணம் ஆச்சர்யம்!
அதிக சம்பளமும் சலுகைகளும் இருந்தும், நிறுவன வேலையை ஏன் விரும்பவில்லை?
மில்லியன் கணக்கானவர்களின் கனவு வேலை வாய்ப்பாக கருதப்படும் கூகிள் நிறுவனத்தில் ரூ.2.52 கோடி மதிப்புள்ள (USD 300,000) வேலையைப் பெற்றிருந்த 27 வயதான ஜிம் டாங், அதனை ராஜினாமா செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
யார் இந்த இளைஞர்?
2021-இல் கூகிளில் சேர்ந்த ஜிம் டாங், தன் பெற்றோரை பெருமைப்படுத்திய கனவு நிறைவேறிய தருணத்தை அனுபவித்ததாக கூறுகிறார்.
இருப்பினும், அதிக சம்பளமும் சலுகைகளும் இருந்தபோதிலும், அவர் நிறுவன வேலை வாழ்க்கையில் திருப்தி அடையவில்லை.
“நிறுவன வேலைகளின் பெரிய ரசிகன் ஒருபோதும் இல்லை. கூகிளுக்காக B2B விளம்பர தயாரிப்புகளில் பணிபுரிந்தாலும், அது உண்மையான அர்த்தமுள்ளதாக தோன்றவில்லை,” என அவர் கூறினார்.
40 வயதிற்குள் 5 மில்லியன் டொலர் சேமித்து ஓய்வு பெற வேண்டும் என்ற திட்டத்துடன் ஜிம் டாங் கடுமையாக உழைத்தார்.
ஆனால் மனச்சோர்வு அதிகரித்ததும், தனிப்பட்ட முறிவுகள் ஏற்பட்டதும், மே 2025-இல் தனது வேலையை விட்டு வெளியேறினார்.
புதிய வாழ்க்கை
வேலை விட்டு வெளியேறிய பிறகு, ஜிம் டாங் ஆசியா முழுவதும் பயணம் செய்து, டோக்கியோ உள்ளிட்ட பல இடங்களில் தங்கினார்.
தற்போது அவர் டிஜிட்டல் தயாரிப்புகளை உருவாக்கி, ஆன்லைன் பயிற்சிகள் அளித்து, சமூக ஊடகங்கள் மூலம் தனது பயண அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.
“முன்பு வெளிப்புற பாராட்டுகளையே வெற்றியாகக் கருதினேன். ஆனால் இப்போது அன்றாட வாழ்க்கையில் திருப்தியாக இருப்பதே உண்மையான வெற்றி என நினைக்கிறேன்,” என அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|