கிரெடிட் கார்டில் 16 எண்கள் ஏன்?
கிரெடிட் கார்டில் 16 இலக்கங்கள் ஏன் உள்ளன? காரணம் தெரியுமா?
கிரெடிட் கார்டில் உள்ள 16 இலக்க எண்களின் மறை அர்த்தம்
இன்றைய டிஜிட்டல் உலகில், கிரெடிட் கார்டு பெரும்பாலானோரின் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டது.
கையில் பணம் இல்லாவிட்டாலும், கார்டின் உதவியால் வாங்கும் வசதி கிடைக்கிறது. மேலும் EMI வசதி, தள்ளுபடி, ரிவார்ட்ஸ் போன்ற பல சலுகைகளும் கிரெடிட் கார்டைப் பிரபலமாக்குகின்றன.
ஆனால், இந்த கார்டின் முன்புறத்தில் 16 இலக்க எண்கள் இருப்பதன் அர்த்தம் என்ன என்று நீங்கள் யோசித்ததுண்டா?
முதல் இலக்கம் – யார் வழங்கியது?
கிரெடிட் கார்டின் முதல் இலக்கம் எந்த நிறுவனத்தால் (Major Industry Identifier) அது வழங்கப்பட்டது என்பதை குறிக்கிறது.
4-ல் தொடங்கினால் – Visa
5-ல் தொடங்கினால் – MasterCard
6-ல் தொடங்கினால் – RuPay
இதன் மூலம் கார்டின் வகையை உடனே அறியலாம்.
முதல் 6 இலக்கங்கள் – வங்கி அடையாளம்
கிரெடிட் கார்டின் முதல் 6 எண்கள் Issuer Identification Number (IIN) அல்லது Bank Identification Number (BIN) என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த கார்டை எந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் வழங்கியுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
7வது இலக்கம் முதல் 15 வரை – உங்கள் கணக்கு எண்
இவை உங்கள் தனிப்பட்ட கிரெடிட் கார்டு கணக்கை அடையாளப்படுத்தும் எண்கள். இதன் மூலம் வங்கி உங்களை தனிப்பட்ட பயனராக பிரித்துணர்கிறது.
கடைசி இலக்கம் – பாதுகாப்பு சோதனை
16வது இலக்கம் Check Digit எனப்படுகிறது. இது முழு கிரெடிட் கார்டு எண்ணின் சரியான அமைப்பை உறுதி செய்யும் வகையில் உள்ளது. இந்த கணக்கீட்டு முறையின் மூலம் யாரும் போலியான கிரெடிட் கார்டை எளிதில் உருவாக்க முடியாது.
கிரெடிட் கார்டின் 16 இலக்க எண்கள் சுமாரானவை அல்ல, ஒவ்வொன்றும் தனித்துவமான அர்த்தத்தையும் பாதுகாப்பு பங்களிப்பையும் கொண்டுள்ளது.
முதல் இலக்கம் நிறுவனத்தைக் குறிக்க, அடுத்த எண்கள் வங்கியையும், நடுவிலான எண்கள் உங்கள் கணக்கையும், கடைசி எண் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
இதனால் தான் உலகம் முழுவதும் கார்டு எண்கள் ஒரே மாதிரியாக 16 இலக்கங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|