Meta நிறுவனத்தின் பல கோடி சம்பளத்தை நிராகரித்த பெண்
ரூ.8,600 கோடி சம்பளத்தில் மெடா வழங்கிய வேலையை நிராகரித்த மீரா முராட்டி
ChatGPT உருவாக்கிய முன்னாள் CTO மீரா, மெடா சலுகையை ஏன் மறுத்தார்
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகளவில் முன்னணி நிலையை பிடிக்க பெரும் போட்டி நிலவுகிறது.
Open AI நிறுவனத்தின் Chat GPT அறிமுகமான பிறகு, Microsoft, Google, Meta போன்ற டெக் மாபெரும் நிறுவனங்கள் இந்த துறையில் வேகமாக முன்னேற பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.
குறிப்பாக, மார்க் ஜக்கர்பெர்க் தலைமையிலான Meta நிறுவனம், Open AI போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய நிபுணர்களை அதிக சம்பள சலுகைகளுடன் பணியில் சேர்க்க முனைந்துள்ளது.
இந்த நிலையில், Chat GPT உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய மற்றும் Open AI நிறுவனத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) இருந்த மீரா முராட்டிக்கு, மெடா நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 8,600 கோடி) சம்பள சலுகை வழங்கியது. ஆனால், மீரா முராட்டி இந்த சலுகையை நேரடியாக நிராகரித்துள்ளார்.
பல கோடி சம்பளத்தை நிராகரித்த பெண்
அல்பேனிய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க நிபுணரான மீரா முராட்டி, Chat GPT உருவாக்கத்திலும், அதை சாதாரண மக்களும் எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைத்ததிலும் பெரும் பங்காற்றியவர்.
தொழில்நுட்ப நுண்ணறிவுடன் சமூக பொறுப்பும் அவசியம் என வலியுறுத்தும் இவர், Ai பயன்பாட்டில் நெறிமுறையும் மதிப்பும் முக்கியம் என பலமுறை பேசியுள்ளார்.
இதனால், Chat GPT குழுவில் அவரை "ஏஐ மூளை" என்று அன்புடன் அழைத்தனர்.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மீரா முராட்டி Open Aiயை விட்டு வெளியேறி, Thinking Machines Lab என்ற தனது சொந்த ஸ்டார்ட்அப்பை தொடங்கினார்.
இந்நிறுவனத்தில் முன்னணி Ai நிறுவனங்களில் பணியாற்றிய பல முன்னாள் ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.
இவர்களை Meta பல்வேறு சலுகைகளுடன் கவர முயன்றாலும், யாரும் நிறுவனத்தை விட்டு செல்லவில்லை என்பது, மீரா முராட்டியின் தலைமைத் திறனை வெளிப்படுத்துகிறது.
உலக பொருளாதார மாநாட்டில் பேசியபோது, “பொறுப்பும் மதிப்பும் இல்லாத Ai என்பது, மனசாட்சியற்ற புத்திசாலித்தனத்திற்கு சமம்” என்று அவர் வலியுறுத்தினார்.
Meta போன்ற பெரிய நிறுவனங்களின் கனவுகளையும், பண சலுகைகளையும் துறந்து, தனது சொந்த பார்வை மற்றும் நோக்கத்திற்காக முன்னேறும் இவரது முடிவு, டெக் உலகில் பெரும் விவாதமாகியுள்ளது.