Home>உலகம்>155 அடி உயரத்தில் அம...
உலகம் (அமெரிக்கா)

155 அடி உயரத்தில் அமெரிக்காவில் முருகன் சிலை!

byKirthiga|3 days ago
155 அடி உயரத்தில் அமெரிக்காவில் முருகன் சிலை!

உலகின் மிக உயரமான முருகன் சிலை அமெரிக்காவில் உருவாக்கம்

190 அடி உயரத்தில் எழும் முருகன் சிலை – இந்து சமூதாயத்தின் பெருமை

இந்தியாவைத் தாண்டி, இந்து கோவில்கள் மற்றும் ஆன்மிகக் கட்டிடக்கலை உலகம் முழுவதும் தங்கள் அடையாளத்தை பதித்துக் கொண்டிருக்கின்றன.

இதுவரை அமெரிக்காவில் சுதந்திர சிலை (Statue of Liberty) மிகப் பிரபலமானதும் உயரமானதும் ஆக இருந்தது. ஆனால் விரைவில் அந்த பெருமை புதிய வடிவில் வெளிப்பட இருக்கிறது.

அமெரிக்காவில் மிகப்பெரிய முருகன் சிலை உருவாக்கப்படும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை உலகின் மிக உயரமான முருகன் சிலையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நார்த் கரோலினா மாநிலம், மான்சூர் (Moncure) என்ற பகுதியில் 155 அடி உயரமுள்ள முருகன் சிலை உருவாக்கப்படவுள்ளது. இது விரைவில் கட்டுமானத்தில் இருக்கும் கரோலினா முருகன் கோவிலின் முக்கிய சிறப்பாக அமையும்.

🚨HOLY CRAP!!!

Hindus in North Carolina have acquired over 130 acres of residential land and are CURRENTLY building a MASSIVE temple with plans for a 155-foot statue of Lord Murugan, the Hindu god of war.

The statue will be taller than the Statue of Liberty...

WHAT?!!!!!!! pic.twitter.com/2FtYNgClmB

— Matt Van Swol (@matt_vanswol) November 1, 2025



இந்தச் சிலை 35 அடி உயர மேடையின் மேல் நிறுவப்படும் என்பதால், அதன் மொத்த உயரம் 190 அடி ஆகும். இதனால் அது அமெரிக்காவின் சுதந்திரச் சிலையை விட உயரமானதாக இருக்கும்.

இந்தத் திட்டம் வெறும் பெரும் கட்டிடமாக அல்லாமல், அமெரிக்காவில் வாழும் இந்து சமூதாயத்திற்கான ஒரு பெருமைச்சின்னமாகவும், ஆன்மிக அடையாளமாகவும் உருவாகிறது. கோவிலின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் தற்போது கட்டங்களாக முன்னெடுக்கப்படுகிறது. முதல் கட்டத்திற்கே சுமார் 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் 130 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு, ஆன்மிகமும் கலாச்சாரமும் இணையும் மையமாக உருவாகும். கோவில் மற்றும் முருகன் சிலை முடிந்தவுடன், அமெரிக்கா முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பெருமையான முருகன் சிலை, அமெரிக்காவில் வாழும் இந்துக்களின் பக்தியையும், அடையாளத்தையும் பிரதிபலிக்கும் ஒரு நினைவுச் சின்னமாகும்.

நார்த் கரோலினாவில் எழும் இந்த சிலை, ஆன்மிக பாரம்பரியம் எல்லைகளைக் கடந்து உலகின் எந்த மூலையிலும் மலர முடியும் என்பதற்கான ஒரு உண்மையான சான்றாக இருக்கும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்