யாருக்கு காதல் திருமணம் நடக்கும்? - இதோ ஜாதக ரகசியம்!
யாருக்கு காதல் தோல்வி ஏற்படும்? - இதோ உங்கள் ஜாதகத்தின் ரகசியம்!
பொதுவாகவே அனைவருக்கும் காதல் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் ஒரு சிலருக்கு தாய், தந்தை பார்க்கும் துணையை கரம்பிடிக்க ஆசை இருக்கும்.
ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் காதல் திருமணம் தான் அதிகமாக நிகழ்ந்து வருகிறது. அதற்கிணங்க ஜாதகம் பார்ப்பதும் அதிகரித்து வருகிறது.
யாருக்கு காதல், கலப்பு திருமணம், அல்லது திருமண தோல்வி ஏற்படும் என்பதை ஜாதகத்தின் அடிப்படையில் தெரிந்துகொள்ளலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம், உண்மை தான். ஒருவரின் ஜாதகத்தில் உள்ள களத்திர ஸ்தானமான 7வது இடம், காதலுக்கான 5வது இடம், மற்றும் ஆன்மிகம், இனத்தை குறிக்கும் 9வது இடம் போன்றவைகளை வைத்து காதல் திருமணம் நடக்கும் வாய்ப்பு இருக்கிறதா அல்லது பெரியோர்கள் நிச்சயிக்கும் திருமணமா என்பதையும் கணிக்க முடியும்.
காதல் திருமணங்கள்:
ஜாதகத்தில் 2, 5, 7, 11வது பாவங்கள் ஒருவருடன் தொடர்பு கொண்டு இருந்தால், காதல் திருமணம் நடைபெறும் வாய்ப்பு அதிகம்.
7வது வீட்டின் அதிபதியுடன் சுக்கிரன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் இணைந்திருந்தால், காதல் திருமண உறுதி.
ராகு-சுக்கிரன் சேர்க்கை, அல்லது ராகு/கேது 5ம், 7ம் வீட்டு அதிபதியுடன் தொடர்பு கொண்டால் கலப்பு திருமணம் ஏற்படும்.
காதல் தோல்வி திருமணங்கள்:
7ம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தால் அல்லது 7ம் அதிபதியுடன் பாவ கிரகங்கள் பார்வை வைத்திருந்தால், காதல் தடம் மாறும்.
5 மற்றும் 7ம் இடங்களில் சுக்கிரன், சனி, செவ்வாய் இணைந்திருந்தால், காதல் ஆரம்பித்து திருமணமாகாது, பிரிவு ஏற்படும்.
2, 5, 7, 12ம் பாவங்களில் தொடர்பு இருந்தால், காதல் திருமணம் நடக்காது.
திருமண தோல்விக்கான காரணங்கள் – களத்திர தோஷம்:
1, 2, 4, 7, 8, 12ம் இடங்களில் பாவ கிரகங்களான சூரியன், சனி, ராகு, கேது, செவ்வாய் இருப்பது களத்திர தோஷம் என்பதைக் காட்டும்.
சுக்கிரன், சனி, செவ்வாய், ராகு அல்லது கேது சேரும் போது, 7வது இடத்தில் இருந்தால் தம்பதிய வாழ்க்கையில் பிரிவு ஏற்படலாம்.
களத்திர தோஷம் உள்ளவர்கள், அதே மாதிரியான தோஷம் கொண்டவரை திருமணம் செய்துகொண்டால், வாழ்க்கை சமநிலையாக இருக்கும்.
இத்தகைய ஜாதக அமைப்புகளை சரியாக அறிந்து திருமண முடிவுகளை எடுப்பது வாழ்க்கையில் சந்தோஷமான உறவை அமைக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.