கல்வி

A/L மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர (G.C.E. A/L) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை பாடசாலைகள் இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பரீட்சைக்கு முன்னதாக மீதமுள்ள வகுப்பறை கற்றல் நேரத்தை மீளாய்வு மற்றும் இறுதிக்கட்ட தயாரிப்புகளுக்காக மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நாட்காட்டியின்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெறவுள்ளது.

இதன்படி, உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைக்கு முன்னர் மொத்தம் ஒன்பது பாடசாலை நாட்கள் கிடைக்கவுள்ளன.

இந்த காலப்பகுதியை மாணவர்கள் அதிகபட்சமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், வகுப்புகளில் தொடர்ச்சியான வருகையை பேண வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 10 ஆம் திகதி தொடங்கி செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கல்வி அதிகாரிகளால் இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இம்முறை நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button