Life Style

இதய ஆரோக்கியம் முதல் குடல் சுத்தம் வரை… பப்பாளி விதையின் அசத்தல் பலன்கள்!

பப்பாளிப் பழம் மட்டுமல்ல, அதன் விதைகளும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஆரோக்கிய பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன.

நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த பப்பாளி விதைகள், உடல்நலத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன.

ஆய்வுகளின்படி, பப்பாளி விதைகளில் உள்ள சில இயற்கைச் சேர்மங்கள் புற்றுநோய் அபாயத்தை குறைக்க, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த, கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, மூட்டு வலி மற்றும் அழற்சியைக் குறைக்க, மேலும் எடை மேலாண்மைக்கும் உதவக்கூடும் என கூறப்படுகிறது.

பப்பாளி விதைகளை நேரடியாக உட்கொள்வதற்குப் பதிலாக, நன்றாக உலர்த்தி பொடியாக்கி சாலட், ஸ்மூத்தி அல்லது பழச்சாறுகளில் கலந்து அளவோடு பயன்படுத்தலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button