
புது தகவல்கள்
திருகோணமலையில் பேருந்து – முச்சக்கர வண்டி விபத்து
திருகோணமலை கண்டி தம்பலகாமம் பிரதான வீதியின் முள்ளிப்பொத்தானை வைத்தியசாலைக்கு முன்னால் நேற்று(04.06.2026) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் அரச பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (SLTB) பேருந்து, முச்சக்கர வண்டி மற்றும் பெரிய கொள்கலன் லொறி (Container Truck) ஆகிய மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.
உயிரிழப்புக்கள் எதுவுமின்றி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



