தொழில்நுட்பம்முக்கிய செய்திகள்

திடீரென முடங்கிய Facebook, Instagram: என்ன நடந்தது?

உலகம் முழுவதும் மெட்டா (Meta) நிறுவனத்தின் Facebook, Instagram மற்றும் Messenger சேவைகள் திடீரென முடங்கியதால் கோடிக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல பயனர்களின் கணக்குகள் தானாகவே Logout செய்யப்பட்டதுடன், புதிய பதிவுகளை பதிவேற்ற முடியாத நிலையும் ஏற்பட்டது. மேலும், பலருக்கு Error செய்திகள் தோன்றியதுடன், சில சேவைகள் முற்றிலும் அணுக முடியாத நிலை காணப்பட்டது.

Facebook மற்றும் Instagram தளங்களில் உள்நுழைவதில் சிக்கல், பதிவுகள் ஏற்றப்படாமை, கருத்துகள் மற்றும் செய்திகளை அனுப்ப முடியாமை போன்ற பிரச்சினைகள் பரவலாக பதிவாகின.

மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதளங்கள் உலகம் முழுவதும் சுமார் 350 கோடி மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இந்த திடீர் சேவை பாதிப்பு உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த கோளாறு தொடர்பாக பல லட்சம் பயனர்கள் ஆன்லைன் தளங்களில் புகார் தெரிவித்தனர். குறிப்பாக அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவிலான புகார்கள் பதிவாகியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்து சரிசெய்யும் பணிகள் அவசரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், சேவை பாதிப்பிற்கான சரியான காரணம் குறித்து உடனடியாக எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை.

சமூக வலைதளங்களை தினசரி தகவல் பரிமாற்றம், வணிக நடவடிக்கைகள் மற்றும் தொடர்பாடல்களுக்காக பயன்படுத்தி வரும் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த தற்காலிக முடக்கம் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button