
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜய் மற்றும் சங்கீதா கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த தகவல் பின்னர் பொதுமக்கள் மத்தியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கு விசாரணை பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், முந்தைய அமர்வுகளில் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், இருவரும் பொதுவெளியில் பிரபலமான நபர்கள் என்பதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுவதில் பாதுகாப்பு மற்றும் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்து, காணொளி காட்சி (Video Conference) மூலம் ஆஜராக அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

நேற்று இடம்பெற்ற விசாரணையின்போது, விஜய் மற்றும் சங்கீதாவின் மின்னஞ்சல் முகவரிகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிபதி சுஜாதா உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், முதலில் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, தற்போது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப நல நீதிமன்றத்தில் தேவையான மனுக்களை தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.




