
உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு – பரீட்சை திகதிகள் உறுதி
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (G.C.E. Advanced Level) பரீட்சை ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 5 ஆம் திகதி நிறைவடையும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் உத்தியோகபூர்வ கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அனைத்து பாடங்களுக்குமான பரீட்சைத் திகதிகள் மற்றும் நேரங்கள் தொடர்பான விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் கால அட்டவணையை கவனமாகப் பார்வையிட்டு, தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
2026 உயர்தரப் பரீட்சைக்கான தயாரிப்புகளை முறையாகத் திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலம் சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.





