World

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 19 மணி நேர நீர் வெட்டு

அத்தனகல்லை கரஸ்நாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 19 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாளை (16) காலை 8.00 மணி முதல் புதன்கிழமை (17) அதிகாலை 3.00 மணி வரை நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

இந்த நீர் விநியோகத் தடை மினுவாங்கொடை, கம்பஹா, மஹர, அத்தனகல்லை மற்றும் நிட்டம்புவ உள்ளிட்ட பல பகுதிகளை பாதிக்கவுள்ளது.

மினுவாங்கொடை, அஸ்கிரிய, உடுகம்பொல, ஓபாத்த மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கம்பஹா மாநகர சபை மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், வெலிவேரிய, பெலும்மஹர மற்றும் ரத்துபஸ்வல பகுதிகளும் இந்த நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்படும்.

மேலும், மஹரகம, சிவராலுமுல்ல, கிரிகித்த, கினிகம, அடிகெஹெல்கல்ல மற்றும் அருகிலுள்ள பகுதிகளிலும் 19 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

அத்தனகல்லை பிரதேசத்தில் உள்ள ரன்பொகுனகம வீடமைப்புத் திட்டம், உரபொல, அத்தனகல்லை, படலேய மற்றும் வத்துபிட்டிவல ஆகிய பகுதிகளுக்கும், நிட்டம்புவ, வேயங்கொட, கலகெதிஹேன, திஹாரிய மற்றும் நைவல பகுதிகளுக்கும் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படவுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், நீர் பயன்பாட்டை சிக்கனமாக மேற்கொள்ளுமாறும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு 1939 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button