பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவுக்கு அதிர்ச்சி… ‘கஜினி’ நடிகர் பிரதீப் ராவத் உயிரிழப்பு!

இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரதீப் ராவத் காலமானார்.

கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரதீப் ராவத் தனது நடிப்புப் பயணத்தை பி.ஆர். சோப்ரா தயாரித்த ‘மகாபாரதம்’ தொலைக்காட்சி தொடரில் அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தின் மூலம் தொடங்கினார். பின்னர் ‘லகான்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் கவனம் பெற்றார்.

தமிழில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ‘கஜினி’ திரைப்படத்தில் வலுவான எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து ‘வீரம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் வில்லன் வேடங்களில் நடித்தார்.

தமிழைத் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் போஜ்புரி திரைப்படங்களிலும் அவர் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

தகவல்களின் படி, கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த பிரதீப் ராவத், ஒரு கட்டத்தில் உடல்நலம் தேறியிருந்தார்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நோய் மீண்டும் தீவிரமடைந்ததால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 4ஆம் திகதி மாலை அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவு செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button