
“குஷ்புவும், சுந்தர்.சியும் என்னை கல்யாணத்துக்கு கூப்பிடல” – நடிகர் ராதா ரவி வருத்தம்!
இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி மற்றும் நடிகை குஷ்பு தம்பதியின் மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் அண்மையில் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமண விழாவில் சிரஞ்சீவி, நாகர்ஜூனா, அமலா, வெங்கடேஷ், ஜாக்கி ஷெராஃப், அனில் கபூர், த்ரிஷா, தமன்னா, ராதிகா, சுஹாசினி, பிருந்தா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த திருமணத்திற்கு தனக்கு அழைப்பு வரவில்லை என நடிகர் ராதா ரவி வருத்தம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
“குஷ்பு என்னை அவரது மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை. அதனால் நான் செல்லவில்லை. திருமணத்தை கோவாவில் நடத்தினார்கள். சுந்தர்.சி என்னை அழைப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவரும் அழைக்கவில்லை.
தேர்தலில் சுந்தர்.சி போட்டியிட்டபோது நான் அவரை வாழ்த்தி அனுப்பினேன். ஆனால் இப்போது என்னை அழைக்கவில்லை. ஒருவேளை தேர்ந்தெடுத்து சிலரை மட்டும் அழைத்திருக்கலாம். அழைத்திருந்தால் நிச்சயம் சென்றிருப்பேன். இப்போது நான் அவர்களுக்கு தேவையில்லை என்று நினைக்கிறேன். அப்போது தேவை இருந்தது, இப்போது இல்லையோ என்று தோன்றுகிறது.” என ராதா ரவி தெரிவித்துள்ளார்.
ராதா ரவியின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.



