
“சினிமாவுக்கு வரலாமா?”.. அப்பா விஜய், அம்மா சங்கீதாவிடம் கேட்டேன் – மனம் திறந்த ஜேசன் சஞ்சய்!
நடிகர் விஜயின் மகனும், ‘சிக்மா’ திரைப்படத்தின் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது சினிமா பயணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
சினிமாவில் அடியெடுத்து வைக்கும் முடிவை எடுப்பதற்கு முன், அப்பா விஜய், அம்மா சங்கீதா, சகோதரி மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் ஆலோசனை கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் தனக்கு முழு ஆதரவும் நம்பிக்கையும் அளித்ததாக கூறிய ஜேசன் சஞ்சய், அந்த தருணத்தில்தான் தனது திறமையின் மீது குடும்பத்தினர் வைத்திருந்த நம்பிக்கையை உணர்ந்ததாக பகிர்ந்துள்ளார்.

மேலும், சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் வளர்ந்ததால் சிறு வயதிலிருந்தே படப்பிடிப்பு தளங்கள், திரைப்பட வெளியீட்டு விழாக்கள் போன்றவற்றை நேரில் பார்த்த அனுபவம் இருப்பதாகவும், திரைப்படங்களை பார்ப்பதே தனது மிகப்பெரிய பொழுதுபோக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. அண்மையில் வெளியான ‘சிக்மா ஸ்டைல்’ பாடலில் ஜேசன் சஞ்சய் தோன்றி நடனமாடியதற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.
\மேலும், எதிர்காலத்தில் அவர் நடிகராகவும் அறிமுகமாகலாம் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.




