
விஜயின் ‘ஜனநாயகன்’ வசூல் வேட்டை… முதல் வாரத்தில் எத்தனை கோடி தெரியுமா?
நடிகர் விஜய் நடிப்பில் H.வினோத் இயக்கிய ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
விஜயின் அரசியல் பயணத்திற்கு முன் வெளியாகியுள்ள கடைசி திரைப்படம் என்பதால், படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், பொங்கல் வெளியீட்டிலிருந்து தள்ளிப்போன நிலையில், கடந்த 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.
சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இந்தத் திரைப்படம், முதல் நாளிலேயே ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. தற்போது படம் வெளியாகி 7 நாட்கள் நிறைவடைந்த நிலையில், உலகளவில் சுமார் ரூ.250 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் ரூ100 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், விஜயின் கடைசி திரைப்படம் என்ற எதிர்பார்ப்புடன் ஒப்பிடும்போது இந்த வசூல் சற்று குறைவாக இருப்பதாக சில சினிமா வர்த்தக வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், வரும் நாட்களில் விடுமுறை மற்றும் வார இறுதி வசூலைப் பொறுத்து, ‘ஜனநாயகன்’ திரைப்படம் மொத்தமாக ரூ.300 கோடி வசூலை எட்டும் என திரையுலக வட்டாரங்கள் கணித்துள்ளன.



