சர்வதேச

சுற்றுலா வருகையில் வளர்ச்சி: ஜூன் மாத வருகை எண்ணிக்கை வெளியீடு

ஜூன் மாதத்தில் இதுவரை 54,465 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.

SLTDA வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவிலிருந்து மட்டும் 21,839 பேர் வந்துள்ளனர். இது மொத்த வருகையாளர்களில் 40 சதவீதமாகும்.

மேலும், பிரித்தானியாவிலிருந்து 4,160 பேரும், சீனாவிலிருந்து 3,503 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3,105 பேரும், பங்களாதேஷிலிருந்து 1,813 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மொத்தம் 138,241 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருந்தனர்.

இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,076,487 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் இந்தியாவிலிருந்து 272,099 பேரும், பிரித்தானியாவிலிருந்து 102,253 பேரும், ரஷ்யாவிலிருந்து 76,686 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்துறையின் தொடர்ச்சியான வளர்ச்சி, நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் அந்நியச் செலாவணி வருமானத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button