150 ஆண்களால் கொலை செய்யப்பட்ட பெண் - நடந்தது என்ன?
ஃபர்குந்தா கொலை: ஆப்கானிஸ்தானை அதிரவைத்த நிகழ்வு
புனித குர்ஆனை அவமதித்ததாக குற்றச்சாட்டு; கூட்டத்தன தாக்குதலில் பலியான ஃபர்குந்தா
2015 மார்ச் 19 ஆம் திகதி, ஆப்கானிஸ்தானின் காபூல் நகரம் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான ஒரு கூட்டத்தனக் கொலைக்குச் சாட்சியாக இருந்தது.
27 வயதான இளம் பெண் ஃபர்குந்தா மலிக்ஜாதா, மதத்தை நேசித்தும், சமூக அக்கறை கொண்டும் வாழ்ந்தவர். அவர் ஒரு மதப்பாட ஆசிரியராகவும், மதம் சார்ந்த சட்டங்களை ஆராயும் மாணவியாகவும் இருந்தார். ஆனால் ஒரே ஒரு தவறான குற்றச்சாட்டு அவரது உயிரை பறித்துவிட்டது.
ஃபர்குந்தாவிற்கு என்ன நடந்தது?
ஃபர்குந்தா 1988 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் காபூலில் வளர்ந்து, மத மற்றும் உலகியலான கல்விகளைப் பெற்றார். குடும்பத்தினர் கூறியபடி, அவர் மிகவும் அமைதியான குணமுடையவராகவும், இஸ்லாமிய சட்டங்களைப் பற்றி ஆழமாக படித்து வந்தவராகவும் இருந்தார்.
2015 மார்ச் 19 அன்று, காபூலின் மசூதிக்கு அருகில் உள்ள ஒரு புனித தலத்தில், ஒரு மத குருவுடன் ஃபர்குந்தாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த குரு, அவள் குர்ஆனை எரித்துவிட்டாள் என்று தவறான குற்றச்சாட்டை பரப்பினார்.
இந்த தகவல் அங்கிருந்த மக்களிடையே வேகமாகப் பரவியது. உண்மையில் ஃபர்குந்தா எந்தவிதத்திலும் குர்ஆனை அவமதிக்கவில்லை என்று பின்னர் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அன்றைய தருணத்தில் மக்கள் அந்த பொய்யை நம்பினர்.
கோபம் அடங்காத மக்கள் கூட்டம், ஃபர்குந்தாவை தாக்கத் தொடங்கியது. கற்களை தூக்கி வீசி, குச்சிகளால் அடித்து, வாகனத்தில் கட்டி இழுத்துச் செல்லப்படுதல் போன்ற துன்புறுத்தலை செய்தனர்.
சம்பவம் அறிந்த காவல்துறையினர் உடனே அந்த இடத்திற்கு விரைந்தனர். ஆனாலும் மக்கள் ஃபர்குந்தாவை தாக்குவதை நிறுத்தவில்லை. 150இற்கும் மேற்பட்ட ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை அடித்து துன்புறுத்தினர். காலால் முகத்திலும் மார்பிலும் உதைத்தனர். இரத்த வெள்ளமாக இருந்த ஃபர்குந்தாவை காவல் துறை அதிகாரிகள் மீட்டெடுத்து, கட்டிடத்தின் மேல் வைத்தனர். அதற்கு மேல் ஏறியும் கல்லால் அடித்தனர். அவரது உடம்பால் தாங்கிக்கொள்ள முடியாமல், ஃபர்குந்தா மீண்டும் கீமே விழுந்தார். அதன்போதும் அவரை அடித்து வாகனத்தில் கட்டி இழுத்து சென்றனர்.
27 வயதான அந்த பெண் ஆடை முழுவதும் இரத்தம் மட்டும் தான் இருந்தது. இழுத்து சென்ற ஃபர்குந்தாவை தீ வைத்து எரிக்க முயன்றனர். ஆனால் அவரது உடல் எரியவில்லை. காரணம், அனைத்தும் இரத்தம். இரத்தத்தால் நனைந்திருந்த ஆடையை எரிக்க முடியவில்லை. உடனே அங்கிருந்த ஆண்கள், தாங்கள் அணிந்திருந்த ஆடையை வீசி தீ அவரை தீ வைத்து எரித்தனர்.
இந்த கொடூரமான காட்சியை அங்கிருந்தவர்கள் புகைப்படமும் வீடியோக்களும் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். உடலை எரித்த பின்னரே ஃபர்குந்தாவின் தாயாருக்கு காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டது.
ஃபர்குந்தாவின் உடலை எந்தவொரு ஆணும் தொடக்கூடாது என்பதற்காக, அந்நாட்டின் பெண்களே இறுதிசடங்கை செய்தனர்.
ஃபர்குந்தாவின் மரணம் ஆப்கானிஸ்தானை மட்டுமல்லாமல் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெண்களின் பாதுகாப்பு, மதத்தின் பெயரில் வரும் கூட்டத்தன வன்முறை, சமூக நீதியின் நிலைமை ஆகியவை கேள்விக்குறியாகின.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் பின்னர் பலர் விடுவிக்கப்பட்டு, சிலருக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் நீதி நடைமுறை குறித்தும் பெரும் சர்ச்சைகள் எழுந்தன.
ஃபர்குந்தா இன்று ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகள் மற்றும் நீதிக்கான போராட்டச் சின்னமாகக் கருதப்படுகிறார். அவரது மரணம் மதம் மற்றும் பாலினத்தின் பெயரில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்கத் தூண்டியது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|