பொழுதுபோக்கு

“பதவியை மறந்து மனிதநேயத்தை காட்டினீர்கள்” – முதல்வர் விஜய்க்கு சாந்தனு புகழாரம்!

மறைந்த இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்ட நிலையில், அவரது மகனும் நடிகருமான சாந்தனு பாக்யராஜ், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் சாந்தனு, முதல்வர் விஜய் தனது குடும்பத்திற்கு வழங்கிய அன்பும் ஆறுதலும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதவை என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், “முதல்வர் அவர்களே, உங்களுக்கான என் நன்றியை சில வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அது என் உயிர் இருக்கும் வரை நீடிக்கும் நன்றியாகும். என் திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்து என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாளைத் தொடங்கி வைத்தீர்கள். அதற்கே இன்னும் முழுமையாக நன்றி சொல்ல முடியவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “என் தந்தையின் மறைவால் ஏற்பட்ட துயர நேரத்தில், உயர்ந்த பதவியில் இருந்தும் அந்த அந்தஸ்தை ஒதுக்கி வைத்து, என் தாயாரிடம் மண்டியிட்டு ஆறுதல் கூறிய உங்கள் மனிதநேயம் என்னை மிகவும் நெகிழச் செய்தது. என் தந்தையின் பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை வழங்கிய உங்களை என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் நினைத்துக் கொள்வேன்.” என்றும் சாந்தனு தனது உருக்கமான பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சாந்தனுவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரும் முதல்வர் விஜயின் மனிதநேய செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button