Tech

WhatsApp-ல் இனி Username வசதி… Phone Number பகிரும் அவசியம் இல்லை!

WhatsApp பயனர்களின் தனியுரிமையை மேலும் வலுப்படுத்தும் வகையில், மெட்டா நிறுவனம் புதிய “Username” வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் இனி மொபைல் எண்ணை பகிராமல், Username-ஐ பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

இதுவரை WhatsApp குழுக்கள் (Groups) மற்றும் Communities-ல் இணைந்திருந்தவர்கள், அறிமுகமில்லாத நபர்களுக்குக் கூட தங்களது மொபைல் எண் தெரியும் நிலை இருந்தது. இதுகுறித்து பயனர்கள் தொடர்ந்து தனியுரிமை தொடர்பான கவலைகளை முன்வைத்து வந்தனர்.

இந்த பிரச்சனைக்கு தீர்வாக, Facebook மற்றும் Instagram போல WhatsApp-லும் Username வசதி அறிமுகமாகிறது. பயனர்கள் தங்களுக்கு விருப்பமான Username-ஐ உருவாக்கி, அதன்மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளலாம். தேவையான நேரத்தில் Username-ஐ மாற்றும் வசதியும் வழங்கப்பட உள்ளது.

மேலும், Block, Report போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழக்கம்போல் தொடரும் என்றும், பிரபலங்களின் பெயர்களை போலியாக பயன்படுத்துவதைத் தடுக்க சிறப்பு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட உள்ளதாக Meta தெரிவித்துள்ளது.

இருப்பினும், WhatsApp கணக்கை உருவாக்குவதற்கு மொபைல் எண் தொடர்ந்து கட்டாயமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button