அமெரிக்காவில் தாய்ப்பால் ஐஸ்கிரீம் - ஆர்வத்தில் மக்கள்
அமெரிக்காவில் அதிர்ச்சி முயற்சி – தாய்ப்பால் ஐஸ்கிரீம் விற்பனை
அமெரிக்காவின் புரூக்ளினில் OddFellows நிறுவனம் வெளியிட்ட தாய்ப்பால் சுவை ஐஸ்கிரீம் மக்கள் ஆர்வம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வியப்பூட்டும் முயற்சி ஒன்று மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. புரூக்ளினில் செயல்பட்டு வரும் OddFellows Ice Cream Co. என்ற தனியார் நிறுவனம் பிரத்யேகமாக ‘தாய்ப்பால் சுவை ஐஸ்கிரீம்’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
தாய்ப்பால் சுவை ஐஸ்கிரீம்
இந்த ஐஸ்கிரீம் அறிமுகமான நாளிலிருந்து கடை முன்பு கூட்டம் அதிகரித்துள்ளதுடன், தினமும் சுவைக்க விரும்பும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதில் உண்மையான தாய்ப்பால் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, liposomal bovine colostrum எனப்படும் ஊட்டச்சத்து சேர்க்கப்பட்டு, தாய்ப்பாலின் சுவையை ஒத்த தனித்துவமான ருசியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி Frida என்ற தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக OddFellows நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை தொடர்ந்து வைத்திருக்க தினமும் வெறும் 50 ஸ்கூப் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், அங்கு தினந்தோறும் மக்கள் கூட்டம் பெருகி, ‘தாய்ப்பால் ஐஸ்கிரீம்’ தற்போது சமூக வலைதளங்களிலும் பெரும் வைரலாக பரவியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|