Home>விளையாட்டு>இந்தியா–பாகிஸ்தான்: ...
விளையாட்டு (கிரிக்கெட்)

இந்தியா–பாகிஸ்தான்: விளையாட்டு அமைச்சின் விளக்கம்

bySuper Admin|3 months ago
இந்தியா–பாகிஸ்தான்: விளையாட்டு அமைச்சின் விளக்கம்

ஆசியக் கோப்பை 2025 – இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும்..., ஆனால்

Asia Cup 2025: இந்திய- பாகிஸ்தான் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விளையாட்டு அமைச்சு

இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்து எழுந்த சர்ச்சைக்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு போட்டிகளில் இந்திய அணி பங்கேற்காது என்பது இந்திய அரசின் தெளிவான நிலைப்பாடு என்றாலும், பன்முக போட்டிகளில் பங்கேற்பதில் தடையில்லை என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வரும் ஆசியக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் என்றும் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குழந்தை பெற்றெடுக்கும் ரோபோ - சீன விஞ்ஞானிகளின் அதிரடி



சமீபத்தில் பலரும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஆசியக் கோப்பையில் ஆடக்கூடாது எனக் கோரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக ‘இந்தியா சேம்பியன்ஸ்’ அணியில் விளையாடிய யூவராஜ் சிங், இர்பான் பாதான், யூசுப் பாதான் போன்றோர், உலக லெஜெண்ட்ஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இறுதி உட்பட இரண்டு முறை விளையாட மறுத்திருந்தனர். எனினும், அந்தப் போட்டி எந்த அதிகாரப்பூர்வ கிரிக்கெட் வாரியத்தின் கீழும் நடத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய அணிகள் பாகிஸ்தானில் போட்டிகளில் பங்கேற்காது. அதேபோல் பாகிஸ்தான் அணிகளும் இந்தியாவில் விளையாட அனுமதிக்கப்படமாட்டார்கள்.

TamilMedia INLINE (22)



ஆனால் பன்முக சர்வதேச போட்டிகளில் இந்தியா பங்கேற்கும். அதுபோலவே இந்தியாவில் நடைபெறும் பன்முக போட்டிகளில் பாகிஸ்தான் அணிகளும் பங்கேற்கலாம். இந்தியா தற்போது உலகளவில் நம்பகமான போட்டி நடத்தும் இடமாக வளர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மேலும் சர்வதேச விளையாட்டு அமைப்புகளின் அதிகாரிகள், வீரர்கள் உள்ளிட்டோருக்கான விசா நடைமுறைகள் எளிமையாக்கப்படும் என்றும், அந்த அதிகாரிகளுக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை பல முறை பயன்படுத்தக்கூடிய விசா வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலைப்பாட்டின் காரணமாக, இந்தியா ஆசியக் கோப்பையின் அதிகாரப்பூர்வ ஏற்பாளராக இருந்தாலும், போட்டி முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற உள்ளது.

அமெரிக்காவில் தாய்ப்பால் ஐஸ்கிரீம் - ஆர்வத்தில் மக்கள்


அதேபோல், சமீபத்தில் பாகிஸ்தான் நடத்திய சாம்பியன்ஸ் டிரோபி போட்டிகளில் இந்திய அணி தன் ஆட்டங்களை துபாயில் மட்டுமே ஆடியது. மேலும், இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மகளிர் அணி இலங்கையில் தான் ஆட உள்ளது.

TamilMedia INLINE (23)


இதற்கிடையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கோப்பையிலும் இந்தியா–பாகிஸ்தான் ஆட்டம் இலங்கையில்தான் நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

ஆனால், ஏப்ரல் 22ஆம் திகதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவத்தால் மக்கள் கோபம் அதிகரித்துள்ளது.

நீண்ட ஆயுளுக்கான ஆரோக்கிய ரகசியங்கள்


அந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் நடவடிக்கையைத் தொடங்கி, எல்லைப்பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்து வருகிறது. இந்த அரசியல் பதட்டத்தின்போதும், இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஆட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

Tamilmedia.lk