சமந்தாவின் அழகிய சருமத்தின் ரகசியங்கள் வெளிச்சம்
குறைவான பொருட்களே போதும் என்று சொல்லும் சமந்தா
நடிகை சமந்தாவின் ஸ்கின் கேர் மற்றும் ஃபிட்னெஸ் ரகசியங்கள்!
திரை நட்சத்திரங்களை எப்போதும் கவர்ச்சியாக, பொலிவாக காண்பது சாதாரண விஷயம் அல்ல.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது சரும பராமரிப்பு மற்றும் உடற்பயிற்சியில் மிகுந்த கவனம் செலுத்துபவராக அறியப்படுகிறார்.
சமீபத்தில் ஒரு யூடியூப் நேர்காணலில், தனது தினசரி அழகு பராமரிப்பு முறைகள் மற்றும் உடற்பயிற்சி பழக்கங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
சமந்தா கூறுவதாவது, சரும பராமரிப்புக்கு அதிகமான பொருட்கள் தேவையில்லை, மாறாக தன் சருமத்திற்கு ஏற்ற சில பொருட்கள் மட்டுமே போதுமானது.
முன்பு பல கட்டங்களுடன் பராமரிப்பு செய்தாலும், தற்போது அவற்றை குறைத்து, ரெட்டினால் (Retinol), சன்ஸ்கிரீன் (Sunscreen), மற்றும் ஒரு நல்ல சீரம் (Serum) ஆகியவற்றை மட்டும் பயன்படுத்துகிறார்.
குறிப்பாக, ரெட்டினால் இளம் வயதினருக்கு தேவையில்லை என்பதையும் அவர் அறிவுறுத்துகிறார்.
காலநிலை மற்றும் சருமத்தின் தன்மைக்கு ஏற்ப பொருட்களை ஆராய்ந்து தேர்வு செய்வது முக்கியம் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.
உடல்நலத்திற்கு அவசியமான உடற்பயிற்சி
சரும பராமரிப்பு மட்டுமே ஆரோக்கியத்திற்கு போதுமானதல்ல. உடலின் மொத்த நலனுக்காக, சமந்தா தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்கிறார்.
பளுதூக்கும் பயிற்சி, பிலேட்ஸ் (Pilates), மற்றும் யோகா ஆகியவற்றை தன் அன்றாட பழக்கமாக வைத்துள்ளார். இது உடலை வலுப்படுத்துவதோடு, மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது என அவர் பகிர்ந்துள்ளார்.
சமந்தாவின் குறிப்புகள், சிக்கலான மற்றும் விலையுயர்ந்த முறைகள் அல்ல.
தன் சருமத்திற்கு ஏற்ற பொருட்களை குறைவாக, ஆனால் தொடர்ச்சியாக பயன்படுத்துவது, தினசரி சன்ஸ்கிரீன் போடுவது, மற்றும் உடற்பயிற்சியை வாழ்க்கையில் இணைப்பது ஆகியவை, யாரும் பின்பற்றக்கூடிய எளிய வழிகள்.